×

நெமிலி தாலுகா பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

*பொதுமக்கள் பாதிப்பு

நெமிலி : நெமிலி தாலுக்காவில் உள்ள நெமிலி, பனப்பாக்கம், கீழ் வீதி, சயனபுரம், அசநெல்லிகுப்பம், காவேரிப்பாக்கம், திருமால்பூர், கரியாக்குடல் உள்ளிட்ட சாலைகளில் இரவு பகல் நேரங்களில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது. அவ்வப்போது வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களையும் விரட்டிக்கடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்றால் பின் தொடர்ந்து வந்து நாய்கள் கடிப்பதாகவும் கூறப்படுகிறது. நெமிலி தாலுகாவில் அளவுக்கு அதிகமாக நாய்கள் உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nemili taluka ,Nemili ,Panapakkam ,Kili Veedhi ,Sayanapuram ,Asanellikuppam ,Kaveripakkam ,Tirumalpur ,Kariyakudal ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...