×

அதிமுகவில் குழப்பம் நிலவ பாஜ காரணம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: சென்னை அசோக் பில்லரில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள இமானுவேல் சேகரனார் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விசிக மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதற்கு பிறகு சுற்றுப்பயணம் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவில் குழப்பம் நிலவுவதற்கு பாஜதான் காரணம். சசிகலாவால் செயல்பட முடியாமல் போனதற்கு யார் காரணம்? ஓ.பி.எஸ். தனிமையாக செல்வதற்கு யார் காரணம்? டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கியதற்கு யார் காரணம்? செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுவதற்கு யார் காரணம்? என்றால் இதற்கு எல்லாம் ஒரே பதில் பாஜதான். பாஜ தலையீடுகளால்தான் அதிமுக இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,AIADMK ,Thirumavalavan ,Chennai ,Viduthalai Siruthaigal Party ,Emanuel Sekaranar ,Ashok Pillar ,VSI ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...