×

வயல்வெளி பயிற்சியில் செயல்விளக்கம் வடுவூர் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஆற்றில் மூழ்கி சாவு

மன்னார்குடி, டிச.18: திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேல நெம்மேலி வடக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கீதா (40). மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகாதவர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கீதா வீட்டிற்கு அருகே உள்ள வடவாற்றுக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. கிராம மக்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தபோது அவர் கொண்டு சென்ற துணிகள் மட்டும் கரையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் வடுவூர் காவல் நிலையத்திற்கும், மன்னார்குடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரமாக தேடி 1 கிமீ தொலைவில் உள்ள கீழநெம்மேலி வண்டிப் பாலம் அருகே உடலை மீட்டனர். கனமழை காரணமாக வடவாற்றல் அதிகளவு தண்ணீர் சென்றதால் கீதா அதில் அடித்து செல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கீதாவின் சடலத்தை கைப்பற்றிய வடுவூர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்று நீரில் அடித்து செல்லப் பட்டு மாற்றுத் திறனாளி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.  மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Demonstration ,Vaduvoor ,river ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு