×

நமங்குணம், இரும்புலிகுறிச்சியில் உளுந்து விதை உற்பத்தி பயிற்சி

அரியலூர், டிச. 18: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நமங்குணம் மற்றும் இரும்புலிகுறிச்சி கிராமங்களில் அட்மா திட்ட மானாவாரி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் உளுந்து விதை உற்பத்தி பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஜென்சி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பழனிசாமி பேசுகையில், இந்திய உணவு வகை பயிர்களில் உளுந்து பயிர்களின் முக்கியத்துவம், அதிலிருந்து பெறப்படும் உளுத்தமாவு மற்றும் வடகம் ஆகியவற்றின் பயன்பாடு, உளுந்தின் வேர் முடிச்சயில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா எவ்வாறு வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜனை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கின்றன என்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் உளுந்து பயிரில் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் வருமாறு விதைப்பு செய்து பயிர் எண்ணிக்கை குறையாமல் தொழில்நுட்பங்களை கடைபிடித்து மூன்று பங்கு வருமானமும், இரண்டு பங்கு லாபமும் பெறலாம் என்றார். இதைதொடர்ந்து உளுந்தில் வரக்கூடிய மஞ்சள் பூஞ்சான் நோய்களை எதிர்த்து வளரக்கூடிய ஆடுதுறை உளுந்து ரகங்கள் பல்வேறு வகையான ஜீன் மாற்றங்களுக்கு உட்பட்டு தரமான நோய் எதிர்ப்புரக விதையாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் முருகானந்தம் மற்றும் உதவிதொழில்நுட்ப மேலாளர்கள் முருகன், குமணண் செய்திருந்தனர்.

Tags : Namangunam ,
× RELATED கலெக்டர் தகவல் நமங்குணம் தொடக்க...