×

கலெக்டர் தகவல் நமங்குணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அரியலூர், செப். 26: நமங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றனர்.செந்துறை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடந்த வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பின்படி தனி தேர்தல் அலுவலர் நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் வீடியோ பதிவுடன் சங்க தேர்தல் நடந்தது. சங்கத்தில் உள்ள 1,575 உறுப்பினர்களில் 913 பேர் வாக்களித்தனர். இதில் 185 வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கபட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக சார்பில் அன்பழகன் தலைவராகவும், காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லரசி துணை தலைவராகவும், அம்மாசி, கோடி, ஒப்பிலாமணி, நிர்மலா, சுந்தரம், பாலசுப்பிரமணியம், ஆர்.அன்பழகன் ஆகியோர் இயக்குனர்களாகவும் கூட்டுறவு தனி அலுவலர் சசிகுமார் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டனர்.திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, ஞானமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் காளமேகம், அவைத்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : Executives ,Collector Information Namangunam Primary Agricultural Co-operative Credit Union ,
× RELATED பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு...