×

கோயில் அருகில் கிடந்த சடலம்

சிவகாசி, செப்.11: சிவகாசி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள காலி இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி விஏஓ செல்லசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Sivakasi Mariamman Temple ,VAO Sellasamy ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...