- ஜெபாஸ்டியன் லெகுர்னு
- பிரான்ஸ்
- ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன்
- பாரிஸ்
- வேந்தர்
- இம்மானுவேல் மக்ரோன்
- செபாஸ்டியன் லெகுர்னு
- மக்ரோன்
- பிரான்ஸ் ஜனாதிபதி
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்தார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக ஃபிரான்சுவா பேரூ பதவியேற்றார்.
பாா்னியா் பதவி விலகிய பின்னா் ஃபிரான்சுவா பேரூவை பிரதமராக மேக்ரான் நியமித்தாா். இந்நிலையில், அரசின் கடன்களை எதிா்கொள்ள அவா் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.இதனால் நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பேரூ நேற்று முன்தினம் மேற்கொண்டாா். அப்போது அவருக்கு எதிராக 364 வாக்குகள் பதிவானதால் அவா் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து நாட்டின் தற்போதைய ராணுவ அமைச்சராக உள்ள செபஸ்டியன் லெகுர்னுவை, 39, புதிய பிரதமராக நியமித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று உத்தரவிட்டார். இதன் வாயிலாக, பிரான்ஸ் நாட்டில் ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு திகழ்கிறார்.
