×

திருப்பதியில் பெண்கள் மாநாடு ஏற்பாடுகள் ஆய்வு அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

*சட்டமன்ற பொதுச் செயலாளர் தகவல்

திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய பெண்கள் அதிகாரமளித்தல் மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநில சட்டமன்ற பொதுச் செயலாளர் பிரசன்ன குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் வெங்கடேஸ்வர், இணை கலெக்டர் சுபம் பன்சால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாநில சட்டமன்ற பொதுச் செயலாளர் பிரசன்ன குமார் பேசியதாவது:

திருப்பதி மாவட்டத்தில் வரும் 14 மற்றும் 15ம் ஆகிய தேதிகளில் தேசிய மகளிர் அதிகாரமளிப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் முறையாக இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மகளிர் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பார்கள். பிற மாநிலங்களில் இருந்து வரும் பிரமுகர்களுக்கு எந்த குறைபாடும், எந்த தொந்தரவும் இல்லாமல் அடிப்படை வசதிகளை வழங்க தொடர்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.

இதனை வெற்றிகரமாக்க, 4 நாட்களுக்கு பணியில் நியமிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைப்பில் எந்த குறைபாடுகளும் இல்லாமல் செய்ய வேண்டும். மாநாட்டிற்கு வருகை தரும் பிரமுகர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். தேசிய பெண்கள் அதிகாரமளிப்பு மாநாட்டின் தலைவராக டக்குபதி புரந்தேஸ்வரி செயல்படுவார்.

பெண்கள் அதிகாரமளித்தல், தலைமைத்துவம், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் சமூக-அரசியல் துறைகளில் பெண்கள் பங்கேற்பு குறித்து விவாதங்களை நடத்துவதும், கொள்கை பரிந்துரைகளை வகுப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

திருப்பதியில் தேசிய அளவிலான மாநாட்டை நடத்துவது நமது மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் மிகவும் பெருமை. மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் சந்திர மவுலி, தொடர்பு அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிரமுகர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜி. நரசிம்மலு, சட்டமன்ற தலைமைச் செயலாளர் அலுவலக ஊழியர்கள், வருவாய் பிரிவு அதிகாரி ராம் மோகன், நெறிமுறை துணை கலெக்டர் சிவராம் நாயக், மாவட்ட அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Women's Conference ,Tirupati ,National Women's Empowerment Conference ,Tirupati Collector ,State Legislative Assembly ,General ,Prasanna Kumar ,Collector ,Venkateswar ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்