×

மதுரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி

மதுரை, செப். 9: மதுரை, அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆக.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியை பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு சிறப்புத்திருப்பலியை மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து அன்னையின் திருவுருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை எட்வின் சகாயராஜா, உதவி பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.

 

Tags : Annai ,Velankanni ,temple ,Madurai ,Annai Velankanni temple festival ,Annanagar, Madurai ,Palai ,Archdiocese ,Bishop ,Jude Palraj ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்