ஈரோடு, செப். 9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அண்ணாசாலை முதல் குறுக்கு வீதியை சேர்ந்தவர் ஜீவா (39). இளநீர் வியாபாரி. இவரது மனைவி வளர்மதி (29). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 8ம் தேதி வளர்மதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ஜீவா, அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாயமான வளர்மதி, பர்கூர் விஜயகுமார் மனைவி ரம்யாவுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதுகுறித்து மாயமான வளர்மதி, ரம்யா இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
