திருவையாறு, செப்.9: திருவையாறு அருகே மேலத்திருப்பந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு. திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பு.எண் பரப்பு: 438/1 மற்றும் 439/ஃ2. முறையே 0.21.0 ஏர்ஸ் மற்றும் 0.45.0 ஏர்ஸ்.
சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹம்சன், தனி தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நில அளவையாளர் ரெங்கராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கோயில் செயல் அலுவலர் சிவராஜன் மற்றும் பணியாளர்கள் புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 20 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு திருக்கோயில் வசம் ஒப்படைத்தனர்.
