×

சீர்காழியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு

சீர்காழி, செப். 9: சீர்காழியில் நடந்த கிராம உதவியாளர் பணியிடங்காளுக்கான தேர்வை கோட்டாட்சியர் சுரேஷ் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா அளவில் கிராம உதவியாளர் 6 காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்றது.

சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, சமூக சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் ஹரிகரன் மண்டல துணை வட்டாட்சியர் தரணி மேற்பார்வையில் 6 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 314 தேர்வுகள் எழுதினர். 89 தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Sirkazhi ,Suresh ,Sirkazhi taluka ,Mayiladuthurai ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்