×

மேற்கு வங்கத்தில் மணல் கடத்தல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரே நாளில் 20 இடங்களில் சோதனை நடத்தியது. இதில் ஏராளமான பணம் வங்கி கணக்குகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ஜாகிருல். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் 20 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. சுபர்ணரேகா ஆற்றின் கரையோரம் உள்ள ஜாகிருலின் வீடு, கொல்கத்தா, பெஹலா, ரீஜென்ட் பார்க், பிதான் நகர்,கல்யாணி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது ஏராளமான பணம், வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Tags : West Bengal ,Kolkata ,Sheikh Jagirul ,Jhargram district ,
× RELATED போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம்...