- விமான நிலைய மூர்த்தி
- சென்னை
- தமிழ்நாடு புரட்சிகர கட்சி விமான நிலைய மூர்த்தி
- வி.கே.சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொது இயக்குனர்
- மெரினா
- விமான நிலைய மூர்த்தி…
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு கடந்த 6ம் தேதி புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பும் அளித்த புகாரின்பேரில், மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விசிக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது திடீரென ஏர்போர்ட் மூர்த்திக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து டாக்டர்கள் பரிந்துரைப்படி ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே, ஏர்போர்ட் மூர்த்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
