×

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ.18.30 லட்சம் உண்டியல் காணிக்கை

கன்னியாகுமரி, செப்.9: கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜான்சி ராணி, உதவி ஆணையர் தங்கம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆய்வாளர் சரஸ்வதி, கோயில் மேலாளர் ஆனந்த் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ. 18 லட்சத்து 30 ஆயிரத்து 621 காணிக்கையாக வசூலானது. மேலும் 9 கிராம் தங்கம் 56 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத் தது.

Tags : Kanyakumari Bhagavathy Amman Temple ,Kanyakumari ,Bhagavathy Amman Temple ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்