×

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிதடி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ்-ஐ செப்.22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார்.

பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள சிமெண்ட் முருகன் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முருகன் என்பவர் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வில் நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளருக்கு உள்ளது. புகார் மீது வேண்டும் என்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறி டிஎஸ்பி சங்கர் கணேஷ்-ஐ உடனடியாக கைது செய்து

Tags : DSP ,Kancheepuram court ,Kanchipuram ,Kanchipuram court ,SANKAR GANESH ,KANCHIPURAM DISTRICT ,PESTIVAKAM AREA ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...