தனித்துவம் மிக்க சாதனைகளால் தடம் பதித்த பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பெருமிதம்

பெரம்பலூர்,டிச.17: தனித்துவம் மிக்க சாதனைகளால் தடம் பதித்து நிற்கும் பெர ம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு இன்று தமிழக முதல்வர் வருகை தர உள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரம்பலூர் சட்டமன்ற, தனித்தொகுதி வரலாற் றில் தன்னிகரில்லா சாதனையாக தடம் பதித்து, யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்த, அம் மாவின் ஆட்சியில் ஆக்கப் பூர்வமான பணிகள் அடுக் கடுக்காக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.சட்டமன் றத் தொகுதி மேம்பாட்டு நிதிகள் மட்டுமன்றி, சாமா னிய மக்களுக்குப் பயனளி க்கின்ற சரித்திர சாதனை கள் பலவும் நிறைவேற்றப் பட்டுள்ளன. கல்லாற்று வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி கழனிகளுக்குப் பயன்படுத்தத் திட் டமிட்டு, மலைகளை இணைத்து மாபெரும் அணையைக்கட்டி, அதனை சுற்றுலாத் தலமாக்கித் தந்தது அம்மா வின் ஆட்சியில்தான். கரிசல் பூமியான வேப்பந்தட் டையில் கலைக் கல்லூரி, அரசால் தொடங்கப்பட்டது அம்மாவின் ஆட்சியில்தா ன். 60 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் அகன்று கிடந்த தாலுகாவை, அடிப்படை வசதிகளுக்காக இரண்டாகப் பிரித்து, ஆலத்தூர் தாலுகாவை உருவாக்கித் தந்தது அம்மாவின் ஆட்சி யில்தான்.

ஆசிரியர் பயிற்சி நிறுவ னத்தை அமைத்துக் கொடுத்தது அம்மாவின் ஆட்சி யில்தான். மாவட்டத் தலைநகர் பெரம்பலூரின் மணிமகுடமாக, மகளிருக்கான உயர் நிலைப் பள்ளியை, அரசால் அமைத்துத் தந்தது அம்மாவின் ஆட்சியில்தான். பருத்தி பூமியில் விளைந்த பஞ்சினைக் கொண்டு, பகட்டான ஆடை நெய்ய, அதனால் பலநூறு பேர் பயனடைய, பாடாலூர் அருகே, ஜவுளிப்பூங்காவை ஜனிக்கச் செய்தது அம்மா வின் ஆட்சியில்தான். சின்னமுட்லு பகுதியில் சிரபுஞ் சியாகப் பொழியும் மழை நீரை சேமித்துக் கல்லாற் றின் குறுக்கே அணையை கட்டி பாசனத்திற்கு மட்டு மன்றி குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய ஆய்வுப் பணிகளைத் தொடங்கி, அத்தியாவசித் திட்டத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்குக் கொண்டுசென்றது அம்மா வின் ஆட்சியில்தான். அம்மாவின் ஆட்சியை அடுத்தடுத்து தொடரச் செய்திட, அடித்தட்டு மக்க ளுக்கும் அரும்பணியாற் றிட, ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை த ரும் பெருமைமிகு எடப்பா டியார் அவர்களை பெரம்ப லூர் சட்டமன்றத் தொகுதி யின் சார்பாக வரவேற்று மகிழ்கின்றோம் என எம்எ ல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More