- யூனியன் அரசு
- வர்த்தக அமைச்சர்
- பியுஷ் கோயல்
- புது தில்லி
- மத்திய அமைச்சர்
- மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர்
- தில்லி
- அமெரிக்க…
புதுடெல்லி: “ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பலன்கள் நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு விழிப்புடன் இருக்கும்” என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்அளித்த பேட்டி: அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதிக்க முடிவெடுத்ததே ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசை தூண்டியிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் சொல்வது ஏற்புடையதல்ல.
ஏனெனில், மாநில , மத்திய செயலாளர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் ஓராண்டு காலமாக ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டதற்கும், வேறெந்த நாட்டின் எந்தவொரு முடிவுடனும் தொடர்புடையதல்ல. இந்த மாற்றம் ஒரே இரவில் நடக்காது. இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முடிவு கடந்த மாதம்தான் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பியூஷ் கோயல், “குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகளின் முழு பலன்களும் நுகர்வோருக்கு சென்றடைவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு விழிப்புடன் செயல்படும். அதேசமயம், மாநிலங்களும் அதனை கண்காணிக்க வேண்டும்” என கூறினார்.
