×

திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்தூர், டிச.16:திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரையுள்ள காலம் சம்பக சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சம்பக சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கொரோனா காலம் என்பதால், வழக்கமாக நடைபெறும் இரண்டு வேளை யாகம், இரண்டு வேளை அபிஷேகம் இல்லாமல், காலை 11 மணியளவில் ஒரு வேளை மட்டும் யோக பைரவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர், பழங்கள் முதலியன கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து யோகபைரவர் சந்தனமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டிம், உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், 108 அஷ்டோத்திர மந்திரங்களை ஓதி பூஜைகளை செய்தனர். நேற்று தொடங்கிய யோக பைரவர் சம்பக சஷ்டி விழா வரும் டிச.20ம் தேதி வரை நடைபெறும். இதில் காலை மட்டும் யோக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6 நாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெற உள்ளது.

Tags : Sambhaga Sashti Festival ,Thiruthalinathar Temple ,
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா