×

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி: முதல்வர் எக்ஸ் தள பதிவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: பிரதமர் மோடி தாங்கள் ஆதரித்த டிரம்ப் விதித்துள்ள யுஎஸ் டேரிப் காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநில தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஏற்கனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு விஸ்வகுரு எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளை பதிவு செய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

Tags : Secular Progressive Alliance ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,DMK ,M.K. Stalin ,US ,Trump ,Modi ,Tirupur ,India ,Gujarat ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...