×

அரவக்குறிச்சி காவல் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்

அரவக்குறிச்சி, செப்.2: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோடு, ராஜபுரம் ரோடு, கரூர் – திண்டுக்கல் ரோடு ஆகிய ரோடுகளின் சந்திப்பு பகுதி உள்ளது.இந்நிலையில் ஜீவா நகர், பொன் நகர் மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல அரவக்குறிச்சி பஸ் நிலையத்திற்கோ அல்லது 1 கி.மீ. தொலைவிலுள்ள கரூர் – திண்டுக்கல் ரோட்டிற்கோ வந்துதான் பஸ்ஸில் ஏறிச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் கூலித்தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் இருந்தல் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட போக்குவரத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags : Aravakurichi police station ,Aravakurichi ,Karur district ,Tarapuram Road ,Rajapuram Road ,Karur-Dindigul Road ,Jeeva Nagar ,Pon Nagar ,
× RELATED மயிலம் அருகே மரத்தின் மீது தனியார் பஸ் மோதி விபத்து: 7 பேர் காயம்