- சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு
- மும்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்கள்
- சேகர்பாபு
- பழனிவேல் தியாகராஜன்
- திருவனந்தபுரம்
- ஐயப்ப பக்தர்கள் மாநாடு.
- திருவிதாங்கூர் தேவசம் போர்டு
- திருவனந்தபுரம்...
திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.இந்த மாநாடு குறித்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: பம்பையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட 7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 500 பேருக்கு இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஐயப்ப பக்தர்கள் மட்டுமே இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு கிடையாது. சபரிமலை மாஸ்டர் பிளான் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
