×

காதல் திருமணம் குறித்து பேசுவதற்காக காதலி வீட்டிற்கு சென்ற இளைஞர் படுகொலை: பெண்ணின் தந்தை உட்பட 9 பேர் கைது

 

புனே: திருமணப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வரவழைக்கப்பட்ட இளைஞர், பெண்ணின் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் புனே அருகே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த ராமேஸ்வர் கேங்கட் (26) என்ற இளைஞரும், அவரது உறவுக்காரப் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அந்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார குற்றப் பின்னணி இருந்ததே இந்த எதிர்ப்பிற்குக் காரணமாகும். இருப்பினும், இருவரும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணம் குறித்துப் பேசுவதற்காக பெண்ணின் வீட்டினர் இளைஞரை அழைத்துள்ளனர். இதை நம்பி, தனது பெற்றோருடன் அந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், ராமேஸ்வரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 9 பேரைக் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

 

 

Tags : Pune ,Rameshwar Gangat ,Bimpri Chinchwad ,Pune, Maharashtra ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...