×

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாய் : சிசிடிவி காட்சி வைரல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் கோத்தகிரியில் தனியார் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உணவு தேடி உலா வந்தது. அப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று கரடியை விரட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gothagiri ,Nilgiri ,Nilgiri district ,Nilgiri District Gotagiri ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...