×

அமெரிக்க வரி எதிரொலி ஏற்றுமதி துறைக்காக அரசு கூடுதல் நேரம் உழைக்கிறது: பொருளாதார ஆலோசகர் தகவல்

கொல்கத்தா: ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று மெய்நிகர் ஒன்றில் பேசுகையில், ‘‘அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்ததில் இருந்து கடந்த 4 நாட்களாக பல்வேறு ஏற்றுமதி மற்றும் பிரதிநிதிகள் அமைப்புகள், தனியார் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு அமைச்சகங்களும், ஒன்றிய நிதி அமைச்சகமும் சரியான உத்தியை உருவாக்க கூடுதல் நேரம் உழைத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் முதன்மையான குறிக்கோள், பாதிக்கப்பட்ட ஏற்றுமதி துறை தற்போதைய புயலை தாங்கி அதிலிருந்து வலுவாக மீள்வதற்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பான அரசின் திட்டம் குறித்து மேலும் விவரங்கள் தற்போது வெளியிடும் நிலையில் இல்லை’’ என்றார்.

Tags : US ,Economic ,Kolkata ,Chief Economic Advisor ,Union Government ,Anantha Nageswaran ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...