×

வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு மறியல்

தர்மபுரி, டிச.15: தர்மபுரி மாவட்ட அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மத்திய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட தலைவர் மல்லையன், நிர்வாகிகள் சின்னராஜ், சக்திவேல், மதிமுக மாவட்ட செயலாளர் தங்கராஜ், நகர செயலாளர் வஜ்ஜிரவேல், அகில இந்திய விவசாயிகள் மஞ்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரதாபன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, சிஐடியூ மாநில செயலாளர் நாகராசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதாக்களை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, 20 பெண்கள் உள்ளிட்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் அரூரில் நடந்த போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 22 பெண்கள் உள்பட 149 பேர் கைது
செய்யப்பட்டனர்.


Tags : India Struggle Coordinating Committee Strikes Against Agricultural Laws ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா