கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாலியல் தொல்லை தந்து பெண்ணை கொன்ற வழக்கில் மதபோதகருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. 2016ல் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுக்கு நெல்லையைச் சேர்ந்த மிலன்சிங் பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து அடித்துக் கொன்று எரித்த வழக்கில் மதபோதகர் மிலன்சிங், அவரது மனைவி ஜீவிதாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
