×

தாட்கோ சார்பில் வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி விடுதி, உணவு இலவசம்

மதுரை, ஆக. 30: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்ற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூன்று மாதங்கள் வழங்கப்படும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சி பெற விரும்புவோர் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் இணைவோருக்கான தங்கும் விடுதி மற்றும் உணவு உள்ளிட்டவை தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்படும்.

 

Tags : TADCO ,Madurai ,Adi ,Dravidar ,Tamil ,Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்