×

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் கருத்து

சென்னை: மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது. ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்த சீர்திருத்தங்களின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்புக்கு அவசியமான மாநில வருவாயை பாதிக்காத வகையில் இவை அமைய வேண்டும். வரி குறைப்பின் பயன்கள் நேரடியாக சாமானிய மக்களை சென்றடைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து தயார் செய்யப்பட்டுள்ள ஒருமித்த வரைவறிக்கை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, மாநில வருவாயினை பாதுகாத்து, நியாயமான முடிவுகளை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் ஆதரவு கோரப்படும்.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Union Government ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...