×

பூப்பந்தாட்ட போட்டிக்கு தர்மபுரி மாணவர்கள் தேர்வு

தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்ட அளவிலான, 70வது ஜூனியர் பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி, செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சங்க மாவட்ட செயலாளர் துரை தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவில் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தர்மபுரி 2ம் பெற்றது. ஆண்கள் பிரிவில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி செல்லியம்பட்டி முதல், இரண்டு இடங்களையும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் முதலிடம் பெற்ற அணிகள், திருச்சி மாவட்டம் ‌தொட்டியத்தில் கொங்கு காலேஜ்ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (30ம்தேதி), நாளை (31ம்தேதி) ஆகிய தேதிகளில் நடைபெரும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Dharmapuri ,70th ,Junior badminton championship cup ,Thuya Kriya Higher Secondary School ,Selliyampatti ,district secretary ,Durai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...