ஓசூர், ஆக. 30: ஓசூரில் ஹெச்பிசிஎல் சார்பில், ஓசூர் ஐயப்ப காஸ் ஏஜென்சியில் பண்டிகை கால சிறப்பு பரிசு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. உதவி விற்பனை மேலாளர் மிதுன் ராமச்சந்திரன், கொடியசைத்து விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘புதிய காஸ் இணைப்பு பெறும் போது, தொகைக்கு ஏற்ப பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி முடியும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எச்பி விற்பனை காஸ் அலுவலகங்களிலும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் டீலர்கள் விநாயகா ஹெச்பி கேஸ் ஏஜென்சி சர்வீஸ் குமரவேல், ஐயப்பா கேஸ் ஏஜென்சி கண்ணதாசன், பரணிதரன், லோகேஷ், ஓம்சக்தி ஹெச்பி கேஸ் ஏஜென்சி ஹரிகிருஷ்ணா, வீரா ஆஞ்சநேயா ஹெச்பி கேஸ் ஏஜென்சி ஜெகநாதன், எஸ்என்பி ஹெச்பி கேஸ் ஏஜென்சி சத்யநாராயணன், உஷாராணி ஹெச்பி கேஸ் ஏஜென்சி செல்வராஜ் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
