×

ஏரல் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 9 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம்

ஏரல் : ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 9 விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஏரல் காந்திசிலை பஸ் ஸடாப் அருகில், வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான உமரிக்காடு, அகரம், கொற்கை, கொற்கை மணலூர், ஆலடியூர், சிறுத்தொண்டநல்லூர், பண்ணைவிளை புதூர் ஆகிய பகுதிகளில் 9 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகளுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இந்த விநாயகர் சிலைகள் ஏரல் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமரி பிரபாகரன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

விநாயகர் சிலைகள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மெயின் பஜார், சினிமா தியேட்டர் ரோடு வழியாக சென்று ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திற்கு மேல்புறம் உள்ள நீரோடையில் விஜர்சனம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் மகேஸ்வரி பிரபாகர், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் நாராயணன், நகர தலைவர் சிவராமன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, நகர பொறுப்பாளர் ராமராஜன், அருள்ராஜ், வெங்கடேஷ், ஜெயச்சந்திரன், வன்னிடியராஜ் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் மாரிமுத்து, வெங்கடேஷ், மகாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags : Airal ,Thamirabarani river ,Ganesha Chaturthi ,Airal Gandhi ,Vandimalaichi Amman… ,
× RELATED மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு...