×

காரியாபட்டியில் ஆக்கிரமிப்பால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் சீரமைக்க போக்குவரத்து போலீசார் தேவை

காரியாபட்டி, டிச. 15: காரியாபட்டியில் உள்ள முக்கியச் சாலைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், அதை சீரமைக்க போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டியில் பஸ்நிலையம் அருகே முக்கிய அரசு அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன. நகரில் உள்ள மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகள் உள்ளன. பஜார் பகுதியிலும் கடைகள் அதிகளவில் உள்ளன.

அரசு அலுவலகங்கள், கடைகளுக்கு டூவீலர்களில் வருபவர்கள், தங்களது வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திச் செல்கின்றனர். இதனால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், நகரில் உள்ள அனைத்து ரோட்டிலும் ஓரமாக கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முறையாக தங்களது வாகனங்களை நிறுத்துவதில்லை. இதனால், ரோட்டில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பல நேரங்களில் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சரகத்திற்கு ஒரு எஸ்.ஐ தலைமையில் பத்து போலிசார் கொண்ட போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து போக்குவரத்து நெரிச்சலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி நகரின் அனைத்து பகுதிகளிலும் ரோட்டின் ஓரத்திலே டூ வீலர்கள்,  கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்களை  இயக்குவதில் சிரமப்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது.

Tags :
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...