- கடல்சார் வாரம்
- தில்லி
- புது தில்லி
- இந்திய கடல்சார் வாரம்
- நெஸ்கோ கண்காட்சி மையம்
- மும்பை
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
- டெல்லி…
புதுடெல்லி: மும்பையில் வரும் அக்டோபர் 27 முதல் 31 ம் தேதி வரை நெஸ்கோ கண்காட்சி மையத்தில் இந்திய கடல்சார் வாரம் நடைபெற உள்ளது. அதன் முன்னோடியாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தரப்பில் டெல்லியில் அதன் தூதர்கள் வட்டமேஜை சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட வௌிநாடுகளை சேர்ந்த தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள், மூத்த அதிகாரிகள், தொழில் தலைவர்கள் மற்றும் பலதரப்பு மற்றும் இருதரப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வட்டமேஜை சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமை தாங்கி பேசுகையில், “வர்த்தகத்தை மேம்படுத்துதல், புதுமைகளை வளர்ப்பது மற்றும் உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறை மிகவும் முக்கியத்துவமாக இருந்து வருகிறது. கடல்சார் துறையை பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உந்துசக்தியாக இந்தியா மாற்றி வருகிறது” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசும்போது, ‘‘துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், உள்நாட்டு நீர்வழிகளை விரிவுபடுத்துதல் மற்றும் பசுமை மற்றும் டிஜிட்டல் கப்பல் போக்குவரத்தில் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடல்சார் வாரம் கீழ் முன்முயற்சிகள் இந்தியாவை ஒரு உலகளாவிய கடல்சார் மையமாக நிலைநிறுத்த ஒரு முக்கியமான தளத்தை வழங்கும் என்று பேசினார்.
