நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், ‘‘ மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றார். அப்போது, புடினின் போர் என கூறுவதற்கு பதிலாக, தவறுதலாக மோடியின் போர் என கூறி விட்டீர்களா? என கேட்டதற்கு,‘‘மோடியின் போர் என்றுதான் கூறினேன். ஏனென்றால்,அமைதிக்கான வழியானது புதுடெல்லியின் வழியேயும் செல்கிறது. மோடி சிறந்த தலைவர், இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடுகளுடன் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் சர்வாதிகாரிகளுடன் செல்கிறார்கள். இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உடனே போர் நின்றுவிடும்’’ என்றார்.
