×

பெண் வழக்கறிஞரின் வீடியோ மீண்டும் பரவுவது எப்படி?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: முடக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் முடக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எப்படி பரவுகிறது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இணையதளங்களில் பரவிய அந்தரங்க வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ தொடர்பான வழக்கின் விசாரணை என்ன நிலையில் உள்ளது? என்றும், மோசமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவுவது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Tags : HC ,Chennai ,Madras High Court ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...