×

அணு ஆயுத போராக மாற இருந்த இந்தியா – பாக். சண்டையை நிறுத்தினேன்: 40வது முறையாக டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன்: அணு ஆயுத போராக மாற இருந்த இந்தியா – பாக். சண்டையை நிறுத்தினேன் என 40வது முறையாக டிரம்ப் மீண்டும் பேசி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. இதனால், பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே அழித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடியாக அந்த நாட்டின் விமானப்படை தளங்கள் மீது இந்திய ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இந்தியா நடத்திய பதிலடியால் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு கெஞ்சியது. இதையடுத்து, மூன்று நாட்களாக நீடித்த இந்த மோதல் முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை நானே நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

ஆனால், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருந்த போதிலும் டிரம்ப் தொடர்ச்சியாக நானே சண்டை நிறுத்தம் செய்ய வைத்ததாக கூறி வருகிறார். அந்த வகையில், 40வது முறையாக இந்தியா – பாக். இடையேயான சண்டையை நிறுத்தியதாக அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இந்தியா – பாக். போரில் 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டையை நிறுத்தாவிட்டால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என கூறினேன். அதிக வரி விதிப்பேன் என கூறிய 5 மணி நேரத்துக்குள் சண்டை நின்றது. இவ்வாறு பேசி வருகிறார்.

Tags : India ,Trump ,Washington ,Pakistan ,Pahalkam terror attack ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...