×

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழப்பு: தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையில் 10 பேர் உயிரிழந்தனர். ஒரு சில தினங்களில், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, 65 பேர் உயிரிழந்தனர்.

70க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.இந்த பேரழிவில் இருந்து மீள்வதற்குள், ஜம்மு – காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், மேக வெடிப்பு காரணமாக நேற்று பெருமழை கொட்டி தீர்த்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அருகே மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால், வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாஸி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Kathra, Jammu and ,Kashmir ,Jammu ,Vaishnava Devi Temple ,Kathra, ,Jammu and ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...