×

ஈரோடு மாவட்டத்தில் 24 மினி கிளினிக்குகள் திறக்க அனுமதி

ஈரோடு, டிச.15: ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்கவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மினி கிளினிக்குள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மினி கிளினிக் அமைப்பதற்கான இடங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே, நகர்புற சுகாதார மையங்கள், கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் இயங்குகின்றன.

இவற்றுக்கு மாற்றாகவும், குடிசைப்பகுதி, நீண்ட தூரங்களில் உள்ள கிராமப்பகுதி, மலைப்பகுதி, குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதி என மருத்துவ சேவை தேவைப்படும் பகுதியை கண்டறிந்து கிளினிக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக்குகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. இங்கு, காய்ச்சல், சளி, இருமல், பிரசர், சுகர் உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக பார்க்கப்படும். இந்த கிளினிக்குகள் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்படும். கிராமப்புறப்பகுதியில் 7 மணி வரை செயல்படும். ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 24 கிளினிக்குகள் நாளை (16ம் தேதி) திறக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Tags : clinics ,Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...