×

நாளை விநாயகர் சதுர்த்தி எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

அண்ணாநகர்: நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நள்ளிரவு 2.30 மணி முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வந்து குவிந்தனர். இதனால் பூ மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,300க்கும் ஐஸ் மல்லி 1000க்கும் ஜாதிமல்லி, முல்லை 750ல் இருந்து 900க்கும் கனகாம்பரம் 500ல் இருந்து 2 ஆயிரத்துக்கும் சாமந்தி 200ல் இருந்து 350க்கும் சம்பங்கி 200 ல் இருந்து 500க்கும் அரளி 200ல் இருந்து 350க்கும் பன்னீர் ரோஸ் 160ல் இருந்து 180க்கும் சாக்லேட் ரோஸ் 160ல் இருந்து 280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘’நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்தம் என்பதால் இன்னும் 2 தினங்களுக்கு இதே விலை நீடிக்கும்’ என்று மார்க்கெட் சங்க துணைத் தலைவர் முத்துராஜ் கூறினார்.

Tags : Vinayagar Chaturthi ,Koyambedu market ,Annanagar ,Chennai ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...