- ஜல்லிக்கட்டில்
- மலேஷியா
- திருச்சி
- டத்தோ சரவணன்
- கவர்னர்
- கிழக்கு மாகாணம்
- இலங்கை
- செந்தில் தொண்டைமான்
- மலேசியா…
திருச்சி: மலேசியா எம்பி டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் திருச்சியில் அளித்த பேட்டி: இலங்கையை தொடர்ந்து மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை வரும் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மலேசிய நாட்டில் இந்தியாவை சேர்ந்த வம்சாவளி இளைஞர்கள் அதிகம் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு இதுவரை 250 காளைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டில் மூன்று லட்சம் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்போட்டியில் தமிழர்கள் கலந்து கொள்வார்கள்.
அங்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். போட்டிகளுக்கான அனுமதி மற்றும் வரைமுறைகள் இந்தியாவில் இருப்பது போன்று இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதே முறை மலேசியாவிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
