×

இலங்கை நீதிமன்றம் விடுவித்த படகுகளை நேரில் சென்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி துறைமுகத்தில், இலங்கை கடற்படையால் கடந்த 2021-22ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 12 விசைப்படகுகள் உள்ளன. 2023, மார்ச் மாதம் இந்த படகுகளை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, படகை மீட்டு வருதற்கான முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது இலங்கை அரசு அனுமதி அளித்ததால் நேற்று காலை மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகின் உரிமையாளர்கள் 13 பேர் சென்றனர்.

இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் படகை சோதனை செய்து விசாரணைக்குப்பின், இலங்கை கடல் எல்லைக்குள் அனுப்பி வைத்தனர். இலங்கை கடற்படையினர் அங்கிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை உடன் சென்றனர். மாலை 5 மணிக்கு மயிலிட்டி துறைமுகத்தை சென்றடைந்தனர். பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீனவர்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் படகுகளை மீட்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் இரவு 7.30 மணிக்கு படகில் ராமேஸ்வரம் திரும்பினர்.

Tags : Rameswaram ,court ,Sri Lanka ,Sri Lankan Navy ,Mylitty ,Jaffna district ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...