×

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் ஒரு பலாத்கார வழக்கு

திருவனந்தபுரம்: கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் அளித்த பலாத்கார புகாரில் பிரபல ராப் பாடகர் வேடன் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ள நிலையில் அவர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரில் மேலும் ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா,திருச்சூரை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகரான வேடன் மீது கொச்சியை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் சமீபத்தில் ஒரு பலாத்கார புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது கொச்சி திருக்காக்கரை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இவர் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் வேடன் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவில் தீர்ப்பு வழங்கும் வரை வேடனை கைது செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி வேடன் மீது ஒரு பலாத்கார புகார் கொடுத்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இமெயில் மூலம் இவர் இந்தப் புகாரை அனுப்பி வைத்துள்ளார். இந்தப் புகார் கொச்சி போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் செய்வதாக கூறி 2021ம் ஆண்டு வேடன் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Vedan ,Thiruvananthapuram ,Kochi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்