புதுடெல்லி: சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி தலைமையில் 3 உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒன்றிய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட 3 தனித்தனி அரசாணையில், படேல், முண்டாவின் 150வது பிறந்தநாள் விழாவையும் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையும் சிறப்புடன் கொண்டாட 3 உயர்மட்ட குழுக்களுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
