×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரவிமோகன், பாடகி கெனிஷா ஜோடியாக தரிசனம்

திருமலை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜெயம்ரவி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். ரவிமோகன், பராசக்தி என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் தான் இயக்குனராகவும் அறிமுகமாக ரவிமோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையில் ரவிமோகனும், அவரது தோழியுமான பாடகி கெனிஷாவும் ஜோடியாக தரிசனம் செய்தனர். தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே இருவரும் ஒன்றாக சேர்ந்து வந்தனர்.

Tags : Ravimogan ,Kenisha ,Tirupathi Elumalayan Temple ,Jayamravi ,Aarti ,Ravi Mohan ,Parasakthi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்