×

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: முதல்வர் பதிவு

சென்னை: திருப்பூர் குமரன் – ஈவிகே சம்பத் சிலையை திறந்து வைத்து ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தியாக தலைவர்களை தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, இந்த தலைவர்களின் புகழைப் போற்றினேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Erode ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Tiruppur Kumaran - ,EVK Sampath ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...