×

திருப்பதியில் 5 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கன் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் 83 ஆயிரத்து 858 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 26,034 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

நேற்று காலை பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் எவ்வித டிக்கெட் இல்லாத பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்படவில்லை. நேரிடையாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 5 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், ரூ.300 கட்டணம் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Lord Shiva ,Tirupati ,Tirumala Tirupati Ezhumalaiyan Temple ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்