புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பாஜ நமது மக்களின் வாக்குகளை தொடர்ந்து திருடும். எனவே கட்சியின் மாவட்ட தலைவர்களின் மிகப்பெரிய பொறுப்பு, அடுத்த 5 ஆண்டுகள் கவனமாக இருந்து இதை தடுக்க வேண்டும். இந்த வாக்கு திருட்டுக்கு பிறகு பாஜ இப்போது அதிகார திருட்டில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில், அரசியலமைப்பு திருத்தம் உட்பட 3 மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர். இந்த மசோதாக்கள் மூலம் பாஜவால் 30 நாட்களுக்குள் எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க முடியும். மாநில முதல்வர்களை கைது செய்வதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க முடியும். பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது சிபிஐ,ஈடி தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன என்றார்.
