×

பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து வரைமுறை இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதா? நடிகர் விஜய்க்கு பாஜ கண்டனம்

சென்னை: தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாநாட்டு பேச்சின் மூலம் தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்கி வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பிரதமர் மோடியை மிஸ்டர் பி.எம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்றும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் தரம் தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இன்னும் நீங்கள் நல்ல மக்கள் அரசியல்வாதியாக மாறவில்லை உணர்ந்து கொள்ளுங்கள்.

இனியாவது வருகின்ற காலங்களில் விளம்பர அரசியலுக்காக, உலக அரசியலுக்கே வழிகாட்டியாக விளங்கும் பாஜவையும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் விமர்சிப்பதை விட்டு, தமிழக வெற்றி கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப் பாதையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Modi ,Chief Minister ,M.K. Stalin ,BJP ,Vijay ,Chennai ,Tamil Nadu ,A.N.S. Prasad ,Madurai ,Naam Tamilar Party ,Sebastian Simons ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...