×

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு: ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

கடலூர மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம். குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (23.8.2025) மாலை 6.00 மணியளவில் மதில்சுவர் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் பணிபுரிந்துவந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த திருமதி. இளமதி (வயது 35) க/பெ.அன்பு மற்றும் திருமதி. இந்திரா (வயது 32) க/பெ. தேவர் ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

 

Tags : Cuddalore ,Chipcat ,Chief Minister ,MLA ,K. Stalin ,Tamil Nadu ,Mathilsuwar Tilt ,Kudikadu village ,Cuddalore district ,Circle ,Kodikadu ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...